சென்னை: ஓய்வு பெற்றடி.ஜி.பி  ஜே.கே.திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாட்டின் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்தவர்  திரிபாதி. அவரது பணி இன்றுடன் ஓய்வுபெற்றது. முன்னதாக, புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு அறிவிக்கப்பட்டு,அவர் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவரிடம் திரிபாஜி பொறுப்பை ஒப்படைத்தார்.
இதையடுத்து, டிஜிபி திரிபாதிக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி மற்றும் அவரது மனைவியை காரில் அமரவைத்து, காவல்துறை அதிகாரிகள் காரை தேர் போல கயிறு கட்டி இழுத்து, காருக்கு முன்பாக மலர்களைத் தூவி, பாரம்பரிய முறைப்படி தேர் போல் வடம் பிடித்து வழியனுப்பி வைத்தனர். மரபுப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது இசைக்குழுவின் இசை முழங்கக் காவல்துறையினர் அணிவகுத்து நின்று வழியனுப்பினர்