சென்னை: வணிகர்கள் தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தகம் செய்வதற்கு, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி வணிகர்கள், மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அந்த உரிமத்தை உரிமைக்காலம் முடிவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தவறாமல் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
https://chennaicorporation.gov.in/gcc/online-services/trade-licence என்ற இணையதளத்தில் தொழில் உரிமத்தை உரிய கட்டணம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம்.
அதேபோல் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகம் மூலமாகவும், அனைத்து இ-சேவை மையங்கள் மூலமாகவும் புதுப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. உரிமம் புதுப்பித்தலுக்கு நிலுவையின்றி தொழில்வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஏற்கெனவே பெறப்பட்ட தொழில் உரிமத்தின் நகல், தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றின் ஆவணங்கள் போதுமானது. கூடுதல் விவரங்களுக்கு 044-25619305 என்ற தொலைபேசி எண்ணையும், ro@chennaicorporation.gov.in மற்றும் arohqpt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறி உள்ளது.
[youtube-feed feed=1]