சன்டிகர்:
மாயாவதியை தரக்குறைவாக பேசிய பா.ஜ.கவை சேர்ந்த தயாசங்கர் சிங்-கின் நாகை அறுப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு என்று மாயாவதி கட்சியை சேர்ந்த ஜன்னத் ஜஹான் என்பவர் அறிவித்துள்ளார்.

ஜன்னத் ஜஹான்   தயா சங்கர் சிங்
            BSP ஜன்னத் ஜஹான்                                   BJP தயா சங்கர் சிங்

பா.ஜ.க உ.பி.மாநில பா.ஜ.க. துணைத்லைவர் தயாசங்கர் சிங், பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கூறு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், ஒவொரு தொகுதியை விலைபேசி விற்று விடுவதாகவும், அதிக விலை கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், மாயாவதியை விலை மாதுவுடன் ஒப்பிட்டு பேசினார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.
பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமை,   தயா சங்கர் சிங்-கை மன்னிப்பு கோர சொன்னது. அதன்பேரில் தயா சங்கர் சிங் பகிரங்க  மன்னிப்பு கேட்டார். மேலும்,  கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டார்.
தயா சங்கர் சிங்-கின் பேச்சு காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இங்களில் அவரது உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,  பகுஜன் சமாஜ் கட்சியின் சண்டிகர் பிரிவு தலைவர்  ஜன்னத் ஜஹான் என்பவர் மாயாவதி பற்றி தவறாக பேசிய தயாசங்கர் சிங்  நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ. 50 லட்சம்  பரிசு வழங்கப்படும் என  அறிவித்து மேலும் கொளுத்தி போட்டு  உள்ளார்.
இது  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.