பாரீஸ் சர்ச்சை புதுப்பிக்க 100 மில்லியன் ஈரோ தர பிரான்ஸ் தொழிலதிபர்கள் முடிவு

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீக்கிறையான பழமைவாய்ந்த நோட்ரே டேம் சர்ச்சை புதுப்பிக்க 100 மில்லியன் ஈரோ தர தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர்.


850 ஆண்டுகால பழமைவாய்ந்த பாரீஸ் நோட்ரே டேம் சர்ச்சில் கடந்த திங்களன்று பராமரிப்பு பணி நடைபெற்று வந்தது.

அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் சர்ச் முழுமையாக எரிந்தது. இதனால் பாரீஸ் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.  நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதற்கிடையே, எரிந்து போன பழமையான சர்ச்சை புதுப்பிக்க 100 மில்லியன் ஈரோ வழங்க அந்நாட்டின் தொழிலதிபர்கள் முன் வந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி பாட்ரிக் பௌயான்னே என்பவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: promised funds, பாரீஸ் சர்ச்
-=-