கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மக்கள் கூடும் அனைத்து பகுதிகளும் மூடப்பட்ட நிலையில், தமிழகஅரசின் தவறுதான நடவடிக்கையால் கோயம்பேடு மார்க்கெட் திறந்து வியாபாரமும் நடைபெற்று வந்தது.
இதனால், அங்கு வியாபாரிகள் மட்டுமின்றி, வியாபாரிகளும் எந்தவித பாதுகாப்பு உபகரணமின்றி சென்று வந்தனர். இதனால், அங்கு கொரோனா தொற்று பரவியது. தற்போதும், அங்கு சிறுகடைகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த வியாபாரம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நோய் தொற்றுக்கு ஆளானவர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை சரியான படி நடைமுறைடுத்தாதல் இன்று சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.