பல கோடி ரூபாய் ஒரு லிட்டர்  திரவம்: உலகின் விலையுயர்ந்த 10 திரவங்கள்
பெட்ரோல் பால் தண்ணீர் உட்பட பல்வேறு திரவங்கள் வாங்குவது பற்றி ஒருமுறைக்கு இருமுறை யோசிக்காமல் வாங்கி வருகின்றோம்.
எப்பொழுதாவது நாம் உலகின் விலையுயர்ந்த திரவங்கள் என்ன என்பது குறித்து சிந்தித்து பார்த்திருப்போமா?
உலகின் ‘திரவச் சொத்துக்களை’ குறித்து இங்கு தெரிந்துக் கொள்வோம்.

  1. நகப் பூச்சு(Nail Polish)10 liquidsபெண்கள் கைகளில் விரும்பி பூசிக்கொள்ளும் திரவமான வண்ணப்பூச்சு ஒரு லிட்டர் விலை இவ்வளவு இருக்கும் என நாம் நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம். நகப்பூச்சின் முக்கியப் மூலப்பொருளான நைட்ரோ செல்லுலோஸ் பருத்தி  (செல்லுலோஸ் நைட்ரேட்) ஒரு  எரியக்கூடிய மற்றும் வெடிக்கும் தன்மை வாய்ந்த்து. இது டைனமைட் செய்ய பயன்படுத்தப்படும் மூலப்பொருள் ஆகும். ரூபாய் 16,000/ லிட்டர்.

 
 9. மனித இரத்தம்
10 li 2
மனித இரத்த உலகின் ஒன்பதாவது விலையுயர்ந்த திரவம் மனித இரத்தம்.  மனித இரத்த விலை விலையுயர்ந்த அல்ல என்றாலும் அதனை பரிசோதனை மற்றும் பதப்படுத்தி தயார்படுத்துவது இதன் மதிப்பை உயர்த்திவிடுகின்றது.  ரூபாய் 27,000/ லிட்டர்.
 

  1. GHB அறிமுக -வன்புணர்வு மருந்து10 li 3

GHB (காமா-ஹைடிராக்ஸி பியூட்ரிக் அமிலம்) ஒரு இயல்பாக ஏற்படும் நியூரோடிரான்ஸ்மிட்டர் மற்றும் பெரும்பாலும் ஒரு போதையூட்டும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படும் உளவியல் மருந்து. இதனை விளையாட்டு திறனை அதிகரிக்கவும் மற்றும் பெண்களை மயக்கி உடலுறவு கொள்ளவும் பயன்படுத்திவருகின்றனர். இந்த மருந்து பல பெயர்களில் , குறிப்பாக, ஜி, திரவ ஜி, திரவ எக்ஸ், மற்றும் பேண்டஸி உட்பட பல தெரு பெயர்கள், உள்ளது. இது பெரும்பாலும் விமானம் மூலம் பல நாடுகளுக்கு கடத்தப் படுகின்றது. ரூபாய் 45,000/ லிட்டர்.
7.கருப்பு அச்சுப்பொறி மை
10 li4
கார்பனால் ஆன கருப்பு அச்சுப்பொறி மை உலகின் ஏழாவது விலையுயர்ந்த திரவம் ஆகும். மதுவை விட இது விலை அதிகம். ரூபாய் 47,000/ லிட்டர்.
6. மெர்குரி:
10 liq 5
அறை வெப்பநிலையில், திரவ நிலையில் உள்ள  ஒரே உலோகமான மெர்குரி,  வெப்பமானி, ஒளிரும் விளக்குகள் மற்றும் பல் மருத்துவத்தில்பயன்படுத்தப்படுகிறது. மெர்குரி மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. ரூபாய் 60,000/ லிட்டர்..
 
5. இன்சுலின்
10 li 6
நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை எழுச்சி பெற்று வரும் உலகில், அனைவரும் இன்சுலின் குறித்து தெரிந்து வைத்திருப்போம். அதன் விலை எவ்வளவு என்பது தான் நமக்கு தெரியாத விசயம். இந்த  ஹார்மோன் கணையத்தால் தயாரிக்கப் பட்டு, நம் உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாம் சாப்பிடும் போது, குளுக்கோஸ் அளவு உயர்ந்து, இன்சுலின் இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படும். .  மறுஇணைவு-DNA தொழில்நுட்பம் மூலம் உயிரியல் தொகுப்பு மனித இன்சுலினை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ரூபாய் 1,60,000/ லிட்டர்.
4.  சேனல் எண். 5 வாசனைத் திரவியம்
10 li 7
ஹாலிவுட்டின் கனவுக்கன்னி மர்லின் மன்றோ தாம் பயன்படுத்தும் திரவியம் என்று கூறியப் பிறகு, இந்த பிரபல வாசனைத் திரவியம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு நிருபர் அவள் படுக்கைக்கு செல்லும் போது பயன்படுத்தும் வாசனை திரவியம் எது என்று ஒரு நிருபர் வினவிய போது,  தான்  சேனல் நம்பர் 5,  பயன் படுத்துவதாகக் கூறினார். நிச்சயமாக.”வாசனைத் திரவியத்தின்  இரசாயன சூத்திரம் ரஷியன்-பிரஞ்சு வேதியியலாளர் எர்னஸ்ட் பியாக்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது.  இதனை பிரஞ்சு கேப்ரியல் “கோகோ” சேனல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ரூபாய் 4, 40,000/ லிட்டர்.
 
3. லைஸ்செரிக் அமிலம் டையத்திலமைடு (LSD)
10 li 8
பொதுவாக அமிலம் என்று அழைக்கப்படும், சட்ட விரோதமாக போதை மருந்து இது. வெறும் 25 மைக்ரோகிராம் (ஒரு சிட்டிகை உப்பு அளவு) உட்பகொண்டால் போதும், தெளிவான மனப்பிராந்திகள் உற்பத்தி திறன் கொண்ட ஒரு மாயத்தோற்ற மருந்து இது.  லிட்டருக்கு ரூ 22 லட்சம், அது உலகின் மூன்றாவது விலையுயர்ந்த திரவம். சட்ட விரோத போதை திரவியத்தின் பிரபல நுகர்வோர்களில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அடங்குவார்.ரூபாய் 21,50,000/ லிட்டர்.
 
 2. தாய்லாந்து கோப்ரா விஷம்
10 li 9
பெரும்பாலும் மிகச்சிறப்பான மருந்து என்று அழைக்கப்படும் தாய்லாந்து நாகப்பாம்பு விஷம், விலையுயர்ந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கின்றது.  இந்த அரிய விஷம் மருத்துவ குணங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.  எதிர்ப்பு விஷமாக்ச் செயல்படுவதுடன்,  வலியை குறைக்கும் மயக்க மருந்தாக்வும் செயல்படுகின்றது.   மோனோக்லெட் கோப்ரா என்றழைக்கப்படும் தாய்லாந்து கோப்ரா நஞ்சானது,  கொடிய நரம்பு நஞ்சு கொண்டிருக்கிறது. தாய்லாந்தில் பாம்புக்கடியால் இறப்போர் எண்ணிக்கைக்கு முக்கியக் காரணியாய் இருப்பதும் இந்த தாய் கோப்ரா தான்.ரூபாய் 26,80,000/ லிட்டர்.

  1. தேள் விஷம்

10 li 10
ஒரு லிட்டர் தேள் விஷம் 68 கோடி ரூபாய் !

தேள் விஷம் அதன் மருத்துவ மதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் புரதங்கள் உள்ளடக்கியது ஆகும்.
பெரும்பாலான தேள் கொட்டு அறிகுறிகள், கொட்டிய இடத்தை சுற்றி வீக்கம் சற்றே வலி மற்றும் உணர்வின்மை கொண்டிருக்கும். எனினும், பட்டை தேள் விஷம் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது உயிரையே பறிக்க்க் கூடும். எனினும், இது தான் உலகின் விலையுயர்ந்த திரவம் ஆகும். ரூபாய் 68,00,00,000/ லிட்டர்.
 
நாம் மரங்களை வெட்டி வரும் வேகத்தைப் பார்த்தால், விரைவில், இந்தப் பட்டியலில், தண்ணீரும் சேந்துவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும்.
கோடை வெப்பத்தை தணிக்க, தண்ணீரி விலை கட்டுக்குள் இருக்கும்  போதே, தண்ணீர் நன்றாகக் குடிக்கவும்.