இந்தியாவின் தலைச்சிறந்த் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இந்திய அரசின் கல்வி நிறுவன ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதற்கான பட்டியலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி இன்று ( ஏப்ரல் 4) வெளியிட்டார். கல்வி நிறுவனங்களை பொறியியல், மேலாண்மை, அறிவியல், மருந்தாளுகை என பல வகைகளில் பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ranking 1
மத்திய மனிதவளத் துறை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியத் தொழிற்நுட்பக் கழகம் சென்னை முதலிடம்

இந்த வகையில், சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில், தமிழகத் தலைநகர் சென்னையில்  உள்ள ஐ.ஐ.டி.-சென்னை என அழைக்கப் படும் இந்தியத் தொழிற்நுட்பக் கழகம் – சென்னை  முதல்  இடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி,  “ஐ ஐ டி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது, நமக்கு நாமே வகுத்துக் கொண்ட ” உபாய திட்டம் 2020″ நோக்கங்கள் நிறைவேற்றும்  லட்சியப் பாதையில்  ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஐஐடி மாணவர்கள் அர்ப்பணிப்புடன்  செயல்பட்டதின் ஒரு பிரதிபலிப்பாகும்”, எனக் கூறினார்.
bhaskar ramamurthy
இந்தியாவில் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள் விவரம் :
1.ஐஐடி, சென்னை
2.ஐஐடி, மும்பை
3.ஐஐடி, காராக்பூர்
4.ஐஐடி, டெல்லி
5..ஐஐடி, கான்பூர்
6.ஐஐடி, ரூர்கே

  1. ஐஐடி, ஹைதராபாத்

8.ஐஐடி, காந்தி நகர்
9.ஐஐடி, ரோபார்-ரூப்நகர்
10.ஐஐடி, பாட்னா
 
மேலதிகத் தகவலுக்கு : இந்தியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியல்