மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர்.
இவர்களுக்காக தடபுடலாக விருந்து சாப்பாடு தயாரிக்கப்பட்டு வருவதாக மாநாட்டிற்கு முதல் நாள் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டது.
பிரியாணி பரிமாறப்படும் என்று நினைத்து வந்தவர்களுக்கு புளியோதரை பரிமாறப்பட்டதை அடுத்து வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
அதேவேளையில், கொடுக்கப்பட்ட புளியோதரையும் மாநாட்டுக்கு பலமணி நேரம் முன்னதாகவே தயாரிக்கப்பட்டதால் சுவையும் தரமும் இல்லாத உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததாக கூறி அதை ஆங்காங்கே வீசிச் சென்றனர். வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் செய்வதறியாது கிடைத்ததை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் பரிமாறப்படாமலேயே 100க்கும் மேற்பட்ட அண்டாக்களில் புளியோதரை மீந்து போனது, தவிர மாநாட்டு திடலில் ஆங்காங்கே விட்டுச் சென்ற உணவுப் பொருட்கள் மட்டும் டன் கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரே நாள் மாநாட்டில் மதுரை நகரையே நாறடித்த மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடக்கூடிய சாப்பாட்டை வீணடித்திருப்பது தமிழக மக்களிடையே முகம் சுழிக்க வைத்துள்ளது மட்டுமல்லாமல் எழுச்சியுடன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.