சென்னை: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ மற்றும்  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாளை  (டிச.28) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில், லட்சக்கணக்கான ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- அரசுப்‌ பணியாளர்கள்‌  கலந்துகொள்வார்கள் என்றும், சென்னையில்‌ சேப்பாக்கம்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை அருகே அணிதிரண்டு, கோட்டை முற்றுகையிட உள்ளோம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

திமுக தனரு தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவோம் என்றும், , இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்றும்,  பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. இதனால், அரசு ஊழியர்களின் ஆதரவுடன் எளிதாக வெற்றிப்பெற்று ஆட்சியிலும் அமர்ந்துள்ளது. பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் கடந்தும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், ஜாக்டோ, ஜியோ உள்பட அரசு பணியாளர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து, கடந்த செம்பர் மாதம், சென்னை நுங்கம்பாக்கத்தில்  டிபிஐ வளாகத்தில்,  டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார்  10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரவோடு இரவோக காவல்துறையினர் மூலம் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், தற்போது தலைமைசசெயலகம் முற்றுகை போராட்டத்தை அறிவித்து உள்ளன.

அதன் அடிப்படையில்‌, 28.12.2023 அன்று இலட்சக்கணக்கான ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌- அரசுப்‌ பணியாளர்கள்‌ சென்னையில்‌ சேப்பாக்கம்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை அருகே அணிதிரண்டு, கோட்டை முற்றுகை இயக்க நடவடிக்கையினை மேற்கொண்டு, தலைமைச்‌ செயலகத்தில்‌ தமிழ்நாடு முதல்வரை சந்திக்க உள்ளோம்’’ என்று ஜாக்டோ- ஜியோ தெரிவித்து இருந்தது. அதன்படி,  நாளை நடைபெற உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும்  போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் போராட்டத்தில் இணைவதாகத் தெரிவித்துள்ளது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டக் கிளை இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் 28ஆம் தேதி  தலைமைச் செயலகம் முற்றுகை! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு!