கன்னியாகுமரி
நாளை கன்னியாகுமரியில் கனமழை பெய்யலாம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நாளை தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழக்கு தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் நாளை கன்னியாகுமரியில் கனமழை பெய்யும் என ம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. எனவே கனமழை எச்சரிக்கை எதிரொலியாகக் கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது நாளை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை விடப்படுகிறது என்று கல்வி அதிகாரி அறிவித்துள்ளார்.