நாளை வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்போன் எடுத்துச்செல்ல தடை

Must read

சென்னை: தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது ‘மொபைல் போன்களை’ எடுத்து செல்லக் கூடாது,” என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, ஈரடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்கு இன்று மாலைக்குள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை அனுப்பப்பட்டு விடும் என்றார்.

 வாக்குப்பதிவு நாள் அன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, வாக்குப்பதிவை கண்காணிக்க உள்ளதாகவும், ஓட்டுப்பதிவை கண்காணிக்க, தலைமைச் செயலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.  அதற்கு தனி அலுவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.  வாக்குச்சாவடிகளுக்கு திடீர் ஆய்வு செல்லும் திட்டமில்லை, என்றார்.

மேலும், பொதுமக்கள் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது, மொபைல் போன்களை எடுத்து செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

More articles

Latest article