சென்னை

நாளை மொக்கா புயல் வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையக் கடக்க உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘மொக்கா’ புயல் மே 11-ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற்றது. இது 12-ம் தேதி (நேற்று) மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி, அதே பகுதியில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு, வடகிழக்காக நகர்ந்து, மேலும் வலுப்பெற்று 14-ம் தேதி (நாளை) நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் – வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கக்கூடும். அப்போது, 150-175 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.”

எனக் கூறப்பட்டுள்ளது.