அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு?

Must read

சென்னை,

மிழர்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற முன்வந்துள்ளது. இதன் காரணமாக நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிகிறது.

தமிழகஅரசு ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அவசர சட்டம் கொண்டு வர இருப்பதாலும், ஏற்கனவே மத்திய அரசு ஜல்லிக்கட்டு குறித்த எந்த வழக்குக்கும் தீர்ப்பு சொல்லக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டை நாடி ஒப்புதல் பெற்றுள்ளதாலும் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடு களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வருவது வழக்கம்.

பீட்டா தொடர்ந்த வழக்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத நிலையில் தமிழகம் உள்ளது. இந்த ஆண்டு தமிழக இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலையை உருவாக்கி உள்ளன.

தென்தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான ஊர் அலங்காநல்லூர். கடந்த 5 நாட்களாக அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி அந்த ஊர் மக்கள் மட்டுமின்றி அருகிலுள்ள ஊர் மக்களும் திரண்டு வாடிவாசல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இரவு பகல் பாராது குடும்பத்தோடு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் சென்று வாடிவாசல் பகுதிகளை ஆராய்ந்தார்.

அப்போது, அரசு அறிவுறுத்தலின் பேரில்  பார்வையிட்டதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article