சென்னை: தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டில், பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் கணித்து வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் என்பது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட இந்து அறுவடைத் திருவிழாக்களில் ஒன்றாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஊரெல்லாம் பசுமையாகவும், செழிப்பாகவும் காட்சியளிக்கும். மேலும் இந்த சமயம் அறுவடை காலம் என்பதால் உழவுத்தொழிலுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இது இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் அனுசரிக்கப்படும் மகர சங்கராந்தியுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நான்கு நாள் கொண்டாட்டம், சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் உத்தராயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இன்று நாடு முழுவதும் பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, தை 1ந்தேதியான நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு மட்டும் அல்லாமல் உலகின் மூலம் வரும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் வரும் இந்த தை திருநாளில் , வீட்டு வாசலில் கோலமிட்டு, புது ஆடைகள் உடுத்தி குடும்பங்கள் மற்றும் சொந்தங்கள் அனைத்தும் கூடி தைத்திருநாளை வரவேற்கும் இந்த பொங்கல் பண்டிகை. தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், மற்றும் காணும் பொங்கல் இதை யாவும் தமிழர்களால் பல ஆண்டுகளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக உலகிற்கு எடுத்துச் சொல்லும் நாள்தான் தைத்திருநாள். அல்லது பொங்கல் திருநாள் இப்படி பல பெயர்கள் உள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறோம். இந்த வருடம் 2026 ஜனவரி15 புதன்கிழமை தைப்பொங்கலை கொண்டாடலாம்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
X காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
X காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை
X நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
தைப்பொங்கல் அன்று வீட்டு வாசலில் மண் அடுப்பு வைத்து அல்லது மண் உருண்டை வைத்து பொங்கல் இடுவது வழக்கம். அப்படி கிழக்கு பக்கம் அடுப்பு முகப்பு இருக்கும் வைத்து வழிபடுவது உகந்தது. இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சூரிய பகவானின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாலும் வெல்லமும் சேர்த்து அரிசி சமைக்கப்படும் பாரம்பரிய இனிப்பு உணவான “பொங்கல்” (“பொங்கி வருதல்”) என்பதிலிருந்து இந்தத் திருவிழாவிற்கு இப்பெயர் வந்தது. இது முதலில் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டு, பின்னர் குடும்பத்தினரால் உண்ணப்படுகிறது. பொங்கல் உணவு குறித்த தகவல்கள் சோழர் காலத்திற்கு முந்தையவை; இது ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.
நாம் உயிர்வாழ உதவும் இயற்கை சக்திகளுக்கு நன்றி தெரிவிப்பதே பொங்கலின் நோக்கம்; எனவே, விவசாயிகள் விவசாயத்திற்குத் தேவையான மழை, சூரியன் மற்றும் விலங்குகளைக் கௌரவிக்கிறார்கள். இந்த நாட்களில் மக்கள் பூஜைகள் செய்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்தும் மகிழ்கிறார்கள். போகிப் பொங்கல் தொடங்கி, சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்களாக இது கொண்டாடப்படுகிறது. மாடுகளை அலங்கரித்தல், சடங்கு ரீதியாகக் குளித்தல், அரிசி மாவால் கோலமிடுதல், பிரார்த்தனை செய்தல் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்று கூடுதல் ஆகியவை இக்கொண்டாட்டங்களில் அடங்கும்.
[youtube-feed feed=1]