சென்னை,

ரசியல் சுற்றுப்பயணம் குறித்து அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், அதற்கு நாளை நமதே என்று பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில், தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே.. நிச்சயம் நமதே.. கமல்ஹாசன் கவிதை பதிவிட்டுள்ளார்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 21ந்தேதி முதல் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதாக அறிவித்த நடிகர் கமலஹாசன், அதற்கு நாளை நமமே என்று பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில், கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நாளை நமதே….
நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்
நாளை நமதே….
பார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்
நாளை நமதே….
நிலவும் நீரும் பொதுவென புரிந்தால்
நாளை நமதே….
எனக்கே எனக்கென முந்தா திருந்தால்
நாளை நமதே…
மூத்தோர் கடமையை இளையோர் செய்தால்
நாளை நமதே…
அனைவரும் கூடி தேரை இழுத்தால்
நாளை நமதே….
சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்
நாளை நமதே…
முனைபவர் கூட்டம் பெருகியும்விட்டால்
நாளை என்பது நமதே நமதே….
கிராமியமே நம் தேசியம் என்றால்
நாளை நமதே… வெற்றியும் நமதே…
தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்
நாளை நமதே… நிச்சயம் நமதே….
நாளை நமதே…. நாளை நமதே…

இவ்வாறு கமல்ஹாசன் தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.