சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாளை நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது. இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரில், 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதிஅமைச்சர் பிடிஆர் இன்று தாக்கல் செய்தார். இதில் மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை உள்பட ஏராளமான புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் கூட்டத்தொடரை ஏப்ரல் 21 வரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். நாளை (21ந்தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறியவர் தொடர்ந்து, மார்ச் 23, 24 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அதற்கு முதலமைச்சர் பதில் அளிப்பார் என்று கூறினார். பின்னர் , 29-ஆம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.