சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.. நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஏராளமான மக்கள் நல திட்டங்கள், அதற்கான நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல்  கூட்டம் ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர்  ஆர்.என்.ரவி  உரையுடன் தொடங்கியது. சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் , தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து,  சட்டப்பேரவையில் இன்று காலை  2023- 34ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் 3வது முறையாக தாக்கல் செய்தார். சுமார் 2மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிடிஆர், அதில், பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையான ரூ.1000 உள்படபல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கு கூட்டம்  நடைபெறும். இதில், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பட்ஜெட், மீதான விவாதத்திற்கு பேரவை  கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும்.

இன்றைய பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள்

 • நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.38.444 கோடி 
 • ஊரக வளர்ச்சிக்கு ரூ.22.563 கோடி
 • நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ.19,465 கோடி
 • போக்குவரத்துறைக்கு ரூ.8,056 கோடி
 • நீர்வளத்துறைக்கு ரூ.8,232 கோடி
 • ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்க ரூ.3,513 கோடி
 • எரிசக்தி துறைக்கு ரூ.10,694 கோடி
 • காவல்துறைக்கு ரூ.10,812 கோடி
 • மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி
 • சமூக நலன் துறைக்கு ரூ.7,745 கோடி,
 • கல்வித்துறைக்கு ரூ.47,266 கோடி
 • குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக்கு ரூ.4,778 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இன்றைய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 

மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

மேலும்,  அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ₹40 லட்சத்தில் இருந்து ₹50 லட்சமாக அதிகரிப்பு

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும்.

சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை WiFi வசதி செய்து தரப்படும்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்

ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் பெறும் வகையில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

பட்ஜெட்தொடர்பான முழுமையான தகவல்களை காண, கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்து தெரிந்துகொள்ளலாம்…