சென்னை:
க்காளி விலை உயர்வு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்க உள்ளது.

அமைச்சர் பெரியகருப்பன், சென்னை தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில், தக்காளிக்கு விலை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.