பொதுவாக பண்டிகை தினம் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் விஜய் படத்துடன் சூர்யா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளது இதே போல தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகர்கள் நடித்துள்ள படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன.
இந்த பொங்களுக்கு மொத்தம் நான்கு தெலுங்கு படங்கள் வெளியாகவுள்ளது :-

கைதி எண்-150

* மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்ஜீவி இவர் கிட்டத்தட்ட பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஆனால் தற்போது இவரின் 150வது படமாக கைதி எண்-150 என்ற படம் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் தமிழில் வெளியாகி மெகா ஹிட்டான கத்தி திரைப்படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதமிபுத்ரா சட்டகம்

* நடிகர் பாலகிருஷ்ணா அவர்களின் நடிப்பில் பொங்களுக்கு வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் கவுதமிபுத்ரா சட்டகம்.
ஓம் நமோ வெங்கடேசாயா

* நடிகர் நாகர்ஜூனா நடித்துள்ள ஓம் நமோ வெங்கடேசாயா திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளது.
குரு

* வெங்கடேஷ் நடித்துள்ள குரு திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் தமிழிம் மாதவன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக டோலிவுட்டின் முன்னனி நச்சத்திரங்கள் படங்கள் எல்லாம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் உள்ளார்கள்..