படபிடிப்பு நடக்காததால் திரும்பி செல்லும் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் தற்போது “பொதுவாக என் மனசு தங்கம்” என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வேலப்பர்கோவிலில் படபிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டதாம் இந்த தகவலை அறிந்த இந்து சமய அறநிலையத்துறையினர் உடனடியாக படபிடிப்பு நடத்தும் கோவிலுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் படபிடிப்பு நடத்த அனுமதி சீட்டு காட்டுங்கள் என்று கேட்டுள்ளார்கள்.
அதன் பின் தான் தெரியவந்துள்ளது அவர்களிடம் அனுமதி சீட்டு இல்லாதது இதனால் இந்து சமய அறநிலையத்துறையினர் படபிடிப்பு நடத்த அனுமதிக்காமல் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்கள் அது மட்டுமல்லாமல் இயக்குநரிடம் முறையாக அனுமதி பெற்று படபிடிப்பு நடத்துங்கள் என்று கூறியுள்ளார்களாம்.
படபிடிப்பு திடீரெண ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினார் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.