ஊரடங்கு காதலைச் சொல்லும் ‘’ 21 dayes..’
சினிமாவுக்கு ‘கரு’ பிடிப்பது எளிது.
ஆனால் தலைப்பு பிடிப்பது, நம் ஊர் இயக்குநர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமான வேலை.
தெலுங்கு சினிமா இயக்குநர் விஜயபாஸ்கர் ராஜ், என்பவர், இயக்கும் புதிய படத்துக்கு-
நவீன ‘டைட்டில்’ ஒன்றைச் சூட்டியுள்ளார்.
’21 dayes’ என்பது அந்த தலைப்பு.
நீங்கள் நினைப்பது போல், ஊரடங்கில் ஏற்படும் நிகழ்வுகளைச் சொல்லும் படம்தான் இது.
வித்தியாசமான காதல் கதையாக இருக்கும் என்கிறது, ’’டோலிவுட்.’’
ஐதராபாத்தைச் சேர்ந்த இளைஞனும், மும்பையைச் சேர்ந்த யுவதியும் சென்னை கல்லூரியில் படிக்கிறார்கள்.
ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுதி மூடப்படுவதால் , நண்பர் ஒருவர் வீட்டில் தங்க நேரிடுகிறது.
மொத்தம்- 21 நாட்கள்.
அந்த கால கட்டத்தில் அவர்களிடையே ஏற்படும் மன மாற்றங்களே , கரு.
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று bjமொழிகளில் இந்த படம் தயாராகிறது.
கதை, வசனம் எழுதித் தயாரித்து டைரக்ட் செய்கிறார், விஜயபாஸ்கர் ராஜ்.
– ஏழுமலை வெங்கடேசன்