பஞ்சாபில் ரூ .22,000 கோடி வருவாய் இழப்பு… ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க பரிந்துரை…

Must read

பஞ்சாப்:
கொரோனா பாதிப்பால் 22,000 கோடி வருவாய் இழப்பை பஞ்சாப் சந்திக்க உள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க தலைமை செயலாளர் பரிந்துரை செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக 2019-20 நிதியாண்டில் பஞ்சாப் மாநிலத்திற்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்புக்கு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் சமீபத்தில் அமைத்த நிதி துணைக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய பஞ்சாப் மாநில நிதியமைச்சர் மன்பிரீத் பாடல், நடப்பு நிதியாண்டில் 88,000 கோடி ரூபாய் வருவாய் ரசீதுகள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக 66,000 கோடி ரூபாய் மட்டுமே இப்போது வசூல் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து வணிக, வரி வசூல் செய்யப்பட்டு விட்டன.

கூட்டத்திற்குப் பிறகு, அனைத்து பஞ்சாப் அமைச்சர்களும் தங்களது முழு சம்பளத்தையும் அடுத்த மூன்று மாதங்களுக்கு முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தனர், தலைமைச் செயலாளர் கரண் அவ்தார் சிங் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தில் குறைப்பு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் “அனைத்து அரசு ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் ஊதியம் மற்றும் கொடுப்பனவை பங்களிக்க முன் வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்ததார்.

கூட்டத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் வருவாயை ஈடுசெய்வதற்கான பல நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது, இதன் காரணமாக அரசு பெரிய நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நிதி நிலை குறைந்தபட்சம் இன்னும் இரண்டு காலாண்டுகளுக்கு தொடரக்கூடும். நெருக்கடியை சமாளிக்க புதுமையான நடவடிக்கைகளை கவனிக்குமாறு குழு உறுப்பினர்களை முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தாண்டில் ஜிஎஸ்டி வசூல் மிகவும் குறைவாக இருப்பதால், மாநிலத்தின் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் கணிசமான தொகையை மையம் இன்னும் வசூல் செய்யவில்லை என்பதாலும், வரும் மாதங்களில் இந்த நிலைகள் தொடர்ந்து மோசமடையும் என்று மாநில நிதியமைச்சர் எச்சரித்தார்.

வழக்கமான அரசாங்க செலவினங்களுடன் கொரோனாதொடர்பான மருத்துவ மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈடுகட்ட கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் துறைகள் முழுவதும் செலவுகளைக் குறைப்பதற்கான துணைக்குழு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மீண்டும் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article