ஹைதி: 
ரீபியன் நாடான ஹெய்டியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் நாடான ஹைதியின் ரிக்டர் அளவில் 7.2-ஆக பதிவான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு மேற்கே சுமார் 150 கிமீ தொலைவிலும், பெட்டிட் ட்ரூ டி நிப்ஸ் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவு காரணமாக ஹைதி பிரதமர் ஒரு மாத கால அவசரநிலையை அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஹைதி மக்களின் நிலை ஏற்கனவே மிகவும் மோசமாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அங்கு மக்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.