டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்து உள்ளது. உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவின்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று ஆசிய சானை படைத்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் பெற்று மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

இன்று காலை (வெள்ளிக்கிழமை)  நடைபெற்ற ஆடவா் உயரம் தாண்டுதல்-டி64 இறுதிச்சுற்று போட்டியில், பிரிட்டன் வீரர் ஜானதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை  இந்திய வீரர் பிரவீன் குமார் எதிர்கொண்டார். இதில் 2வது இடம் பிரவீன் குமாருக்கு கிடைத்தது.  18வயதான பிரவீன் குமார் முதன்முதலாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், 2.07 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனை படைத்தார்.

இந்திய தடகள வீரர் பிரவீன் தனது முதல் முயற்சியிலேயே 1.88 மீட்டரும், அடுத்தடுத்த முயற்சிகளில் 1.93 மீட்டர், 2.01 மீட்டர் தாண்டி மூன்றாவது இடத்தை பிடித்தார். அடுத்தடுத்த முயற்சிகளில் 2.01 மீட்டர், 2.04 மீட்டர் தாண்டி, விடாமுயற்சியில் சவாரி செய்து 2.07 மீட்டர் தாண்டி ஆசிய சாதனையை படைத்தார்

பாராலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா 11 பதங்களை வென்று பதக்கப்பட்டியலில் 36 ஆவது இடத்தில் உள்ளது.