டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானுக்கு வெள்ளிப் பதக்கம்…

Must read

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.  பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்து உள்ளது. இதன்மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது. தொடர்ந்து பதக்கங்களை குவிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடிடபெற்ற பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 2வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

பெண்கள் 49 கிலோ பிரிவில் பங்கேற்ற மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு 115 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார். முதல்பரிசை சீன வீராங்கனை தட்டிச்சென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனதுபதக்க வேண்டடையை தொடங்கி உள்ளது.

மீராபாய் சானு வெற்றிக்கு மணிப்பூர் முதலமைச்சர் என் பிரேன் சிங்  வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்,  நீங்கள் இன்று நாட்டை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

More articles

Latest article