2020 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி ஜப்பானில் துவங்க இருக்கிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் துவக்க விழா மற்றும் போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடைபெறும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது.
போட்டிகளைக் காண ஆவலுடன் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.
டிக்கெட்டை ரத்து செய்வதற்காக ஆன்லைனில் பல்லாயிரக்கணக்கான கோரிக்கைகள் வருவதை அடுத்து, டிக்கெட் ரத்து குறித்து விளக்கமளித்த அதிகாரி ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுவதை நினைத்து கண்ணீருடன் விளக்கம் அளித்திருப்பது அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது.