சென்னை:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 28-வது நாளாக இன்றும் மாற்றமில்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 17வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாய் 85 காசுகளாகவும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.