வரலாற்றில் இன்று 31.10.2016
அக்டோபர் 31 (October 31) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
475 – ரோமுலசு ஆகுஸ்டலசு ரோமப் பேரராசன் ஆனான்.
1876 – இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி 200,000 பேர் இறந்தனர்.
1913 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1961 – ஸ்டாலினின் உடல் மொஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1969 – வால் மார்ட் தொடங்கப்பட்டது.
1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2000 – சிங்கப்பூர் போயிங் 747-400 விமானம் தாய்வானில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் ழபலி
2003 – 22 ஆண்டுகள் ஆட்சிக்கு மலேசியப் பிரதமர் மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார்.
பிறப்புகள்
1875 – வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)
1930 – மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளிவீரர்
1961 – பீட்டர் ஜாக்சன், நியூசிலாந்து நடிகர், இயக்குனர்
இறப்புகள்
1975 – எஸ். டி. பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1906)
1984 – இந்திரா காந்தி, இந்தியாவின் 3வது பிரதமர் (பி. 1917).
1990 – எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப்பாடகர் (பி, 1928)
2003 – செம்மாங்குடி சிறிநிவாச ஐயர், இந்திய கர்நாடக இசைப் பாடகர், (பி. 1908).
2005 – பி. லீலா, பின்னணிப் பாடகி (பி. 1934)
சிறப்பு நாள்
ஆலோவீன்
தேசிய ஒற்றுமை நாள் (இந்தியா)
உலக சேமிப்பு நாள்