வரலாற்றில் இன்று 05.12.2016

Must read

வரலாற்றில் இன்று 05.12.2016
டிசம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1082 – பார்சிலோனா மன்னன் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டான்.
1360 – பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
1492 – கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். 
1746 – ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
1893 – மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
connemara-library
1933 – யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1934 – இத்தாலியப் படைகள் அபிசீனியாவின் வால் வால் நகரத்தைத் தாக்கினர்.
1936 – சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 
1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1957 – இந்தோனீசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 – STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 – அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1978 – சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983 – ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
2003 – இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2006 – பிஜியில் இராணுவப் புரட்சி: ராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
பிறப்புக்கள்
1782 – மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
1901 – வால்ட் டிஸ்னி, உலகப் புகழ் பெற்ற ஓவியர் (இ. 1966)
1901 – வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவர் 
1966 – தயாநிதி மாறன், முன்னாள் நடுவண் அமைச்சர்,
1985 – ஷிகர் தவான், இந்தியத் துடுப்பாட்ட வீரர்.
இறப்புகள்
1926 – குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (பி. 1840)
1950 – ஸ்ரீ அரவிந்தர், இந்திய ஆன்மீகவாதி, (பி. 1872)
1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் (பி. 1899)
kalki
2013 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்கா கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர் 
neloson
சிறப்பு நாள்
தாய்லாந்து – தேசிய நாள்,
தந்தையர் நாள்.
பெல்ஜியம், செக் குடியரசு, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் – புனித நிக்கலஸ் மாலை.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article