வரலாற்றில் இன்று 04.12.2016

Must read

வரலாற்றில் இன்று 04.12.2016
டிசம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை கண்டுபிடித்தார்.
1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் யோசிப் டீட்டோ “சனநாயக யூகொசுலாவிய அரசு” ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
1945 – ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
1958 – பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
1967 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர்.
1971 – இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
1976 – ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
1910 – ரா. வெங்கட்ராமன், 6வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)
venkatraman
 
1919 – ஐ. கே. குஜ்ரால், 12வது இந்தியப் பிரதமர் (இ. 2012) 
i-k-gujral
1949 – ஜெப் பிரிட்ஜஸ், அமெரிக்க நடிகர்
1977 – அஜித் அகர்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
1131 – ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர், மெய்யியலாளர், கணிதவியலாளர் 
1898 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (இ. 1961)
1976 – ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900)
2014 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (இ. 1914)
சிறப்பு நாள்
இந்தியா – கடற்படையினர் தினம்

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article