சென்னை: உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன்படி, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் ஒரு தீர்ப்பையும், மற்ற 3 நீதிபதிகள் 3 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர். இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதி களில் 4 நீதிபதிகள் தீர்பளித்திருக்கின்றனர்.

இந்த தீர்ப்பு மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது. கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது,  10% EWS இடஒதுக்கீடு வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு, சமூகநீதியை வென்றடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்  என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்ப தற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும். சமூக நீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, திமுக வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் முதல் வழக்கு திமுகவுடையது. 10% இட ஒதுக்கீட்டால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.

மண்டல் கமிஷன் அறிக்கை? உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பால், முந்தைய 50% இடஒதுக்கீடு தீர்ப்பு கேள்விக்குறியானது…