சென்னை

மிழகத்தில்  இன்றைய (17/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 33,075 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,31,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 18,005 பேர் உயிர் இழந்து 13,81,690 பேர் குணம் அடைந்து தற்போது 2,31,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,44,371 பேர் பாதிக்கப்பட்டு 5,851 பேர் உயிர் இழந்து 3,90,364 பேர் குணம் அடைந்து தற்போது 48,156 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,18,804 பேர் பாதிக்கப்பட்டு 886 பேர் உயிர் இழந்து 93,723 பேர் குணம் அடைந்து தற்போது 24,195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,15,595 பேர் பாதிக்கப்பட்டு 1,263 பேர் உயிர் இழந்து 99,426 பேர் குணம் அடைந்து தற்போது 14,906 பேர் சிகிச்சையில் உள்ளனர்.