தமிழக அரசின் மருத்துவமனை படுக்கை ஆன்லைன் பதிவு தள முகவரி மாற்றம்

Must read

சென்னை

மிழக அரசின் மருத்துவமனை படுக்கை ஆன்லைன் பதிவுக்கான இணைய தள முகவரி மாற்றப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.    நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி உள்ளன.  பலரும் காத்திருக்க நேரிடுகிறது.

இதையொட்டி தமிழக அரசு சார்பில் வார் ரூம் அமைத்து தொலைப்பேசி மூலம் படுக்கைகள் காலி உள்ள மருத்துவமனைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.   இதை மேலும் விரிவாக்கி ஆன்லைன் மூலம் மருத்துவ படுக்கைகளை முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியது.

கூகுள் மூலம் செயல்பட்டு வரும் இந்த முன்பதிவு தள முகவரி மாற்றப்பட்டுள்ளது.  இனி மருத்துவமனைப் படுக்கைகள்   https://t.co/F1PS2uTUFn என்னும் முகவரியின் மூலம் பதிவு செய வேண்டும்.  பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

More articles

Latest article