இன்றைய வர்த்தகச் செய்திகள் 04/11/2017

Must read

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் :

1.   சீனத் தயாரிப்பான ஒப்போ மொபைலுக்கு தனி விற்பனையகம் தொடங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது. இனி நேரடியாக ஒப்போ மொபைல் ஃபோன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.  உலகில் அதிக அளவில் விற்கப்படும் ஸ்மார்ட் ஃபோன்களில் மூன்றாவது இடத்தில் ஒப்போ உள்ளது.

2.   ஆஸ்திரேலியாவில் கார் உற்பத்தியை டொயோடா நிறுவனம் நிறுத்தி விட்டது. கடந்த 54 வருடங்களாக இயங்கி வந்த இந்த டொயோடா மோட்டார் கார்பரேஷன் ஆஸ்திரேலியா லிமிடட் என்னும் நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

3.   உள்நாட்டு வாணிக போக்குவரத்துக்கு நீர்வழித்துறையை மேம்படுத்தி மெத்தனால் மூலம் இயங்கக் கூடிய கப்பல்கள் விடப்படும் என மத்திய அமைச்சர் கட்காரி அறிவித்துள்ளார். மெத்தனாலுக்கு மூலப் பொருளான நிலக்கரி நாடெங்கும் பல இடங்களில் கிடைப்பதால் இந்த திட்டம் வெற்றி பெறும் எனக் கூறி உள்ளார்.

4.   பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் பெருமளவில் வாகனங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.  அதனால் அனைத்து வாகன உற்பத்தி தொழிற்சாலைகளும் மும்முரமாக இயங்கி வருகின்றன.  சொகுசுக் கார்கள் மட்டுமின்றி வணிக வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

5.   கோத்ரெஜ் அக்ரோவெட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. கடந்த 1991ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு தொடர்ந்து அதிக டிவிடெண்டுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  இதன் பங்குகள் ரூ450-ரூ.460 விலையில் விற்கப்படுகின்றன.

More articles

Latest article