புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் ஏப்ரலில் அச்சடிப்பு

டில்லி

ரிசர்வ் வங்கி புதிய 100 ரூபாய் நோட்டுக்களை 2018ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அச்சடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்திய அரசு ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாதவை என அறிவித்தது.  அதன் பின் அனைத்து ரூபாய் நோட்டுக்களும் மாற்றி அமைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது.  மற்றும் ரூ.2000 மற்றும் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  ரூ.50 மற்றும் ரூ.500 ஆகிய நோட்டுக்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டன.

தற்போது ரூ. 200 நோட்டுக்கள் அச்சடிப்பு இந்த வருட இறுதிக்குள் நிறைவு பெறும் என தெரிய வந்துள்ளது.  அதன் பிறகு புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க டெண்டர் விடப்படும் என கூறப்படுகிறது.  புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் பழைய வடிவிலும் அதே அளவிலும் அச்சடிக்கப்பட்டு ஏ டி எம் களில் உடனடியாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
English Summary
RBI will print New 100 Rs notes by 2018 April