இன்றைய (10/10/2017) முக்கிய வர்த்தகச் செய்திகள் இதோ
1. ஏர் இந்தியாவின் ஏலத்தில் பங்குகளை வாங்குவதில் டாடா குழுமம் ஆர்வமாக உள்ளது. டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன், அரசு தனது இறுதி முடிவை விரைவில் தெரிவிக்கும் என தாம் நம்வுவதாக சிஎன்பிசி-டிவி 18 இடம் கூறினார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ஏல இந்தியாவில் ஏலத்தில் ஏலத்தில் ஈடுபடுவதாக டாடா பேசியதா என்று கேட்கப்பட்டபோது சந்திரசேகரன், “இது கூட எனக்குத் தெரியாதா?” என்று பதிலுக்கு கேட்டார்.
2. கேர்ன் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும், மேற்கில் பார்மர் பகுதியிலும் எண்ணெய் வளங்களை கண்டறிய ரூ.300 பில்லியன் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள இந்திய எரிசக்தி குழுமத்தின் இணைப்பாளர்களில் ஒருவரன சுதிர் மாதுர் இதற்கான அரசு அங்கீகாரம் வரும் அக்டோபர் இறுதிக்குள் வழங்கப்படும் என அறிவித்தார். இந்தப் பணம் மூன்று முதல் நான்கு ஆண்டு கால கட்டத்தில் செலவழிக்கப்படும் எனவும் மாதுர் தெரிவித்தார்.
3. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது பொருளாதார முன்னேற்றம் வெகுவாக குறைந்துள்ளது. செப்டம்பர் 2017க்கான ஆய்வின்படி பொதுவான பொருளாதார சூழ்நிலை, வேலைவாய்ப்பு சூழ்நிலை, நுகர்வோர் சந்தையின் சூழ்நிலை, விலைவாசிகளின் சுழ்நிலை, மக்களின் வரவு செலவு ஆகியவை நம்பிக்கையற்று காணப்படுகிறது. இதன் எதிரொலி வரும் காலாண்டுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. இந்த வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவின் எட்டு நகரங்களில் புதிய வீடுகள் கட்டுவதில் 33% குறைந்து 60140 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. கடந்த வருடன் ஜனவரி 20166 முதல்
செப்டம்பர் வரை 89970 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த நகரங்களானது டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் ஆகும். இதில் மும்பை தவிர மற்ற நகரங்களில் இந்த வீழ்ச்சிக்கு காரணம் வட்டி விகித மாற்றமும் ஜி எஸ் டி அமுலாக்கமும் தான் என சொல்லப்படுகிறது.
5. கடந்த பத்தாண்டுகளாக குறைந்து வரும் வரி வருமானத்தை சரிக்கட்ட இந்தியா தனது ஐம்பதாண்டுகள் பழமையான நேரடி வரி சட்டங்களை மாற்றி அமைக்க உள்ளது. மோடியின் பா ஜ க அரசாங்க வரி செலுத்துவோர் பல்வேறு கணக்குகளை சமர்ப்பிக்காமல் துரித கதியில் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இதற்கான வரைவு மசோதா வரும் 2018க்குள் முடிவாகிவிடும் என நம்பப்படுகிறது.