தூத்துக்குடி

இன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களுக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்குக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கடல்பகுதியில் 60 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என்பதால் விசை மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து, மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.