சென்னை

இன்னும் ஓராண்டில் அனைத்து தமிழக கிராமங்களிலும் பைபர் நெட் வசதி அளிக்கப்படும் என அமைச்சர் பழனிவேல தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு குறித்து ஒரு கருத்தரங்கு சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழக அரசின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல தியாகராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்

அவர் தனத் உரையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த ஓராண்டிற்குள் இந்த திட்டம் நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.