சென்னை

சென்னையில் சுதந்திர தின விழா ஒத்திகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடெங்கும் வரும் 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனால் இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.  சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி காரணமாக, நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளிலும் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.