சென்னை

மிழகத்தில் இன்று இரவு 8 மணி வரை 27.84 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு தடுப்பூசி மைய நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நாடெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது.  நாடெங்கும் இந்த வருட இறுதிக்குள் தகுதி உடைய அனைவருக்கும் தடுப்பூசிகள் போட்டு முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அவ்வகையில் இன்று தமிழகம் எங்கும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி இரவு 8 மணிவரை ஒரே நாளில் 27.84 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இது தமிழக தடுப்பூசி வரலாற்றில் புதிய சாதனை ஆகும்.  இதில் முதல் டோஸ் தடுப்பூசி 20.29 லட்சம் பேருக்கும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி 7.19 லட்சம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ள மையங்களில் மட்டும் தடுப்பூசி போடும் நேரம் இரவு 8.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதைத் தமிழக பொதுச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை 1,80,681 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்,  இதில் அதிக பட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 18400 பேர் போட்டுக்கொண்டுள்ளனர். இரண்டாவதாக அம்பத்தூர் மண்டலத்தில் 17,230 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். குறைந்த பட்சமாக மணலியில் 5,978 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்