சென்னை:

2017 – 2018 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில் நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசின் முதல் பட்ஜெட் இது. அதே போல நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் முதல் பட்ஜெட்.

பயம்:

“பல்வேறு இன வருவாய் குறைவு, அதிகரிக்கும் கடன் மற்றும் வட்டி ஆகியவற்றால் தமிழக அரசின் நிதிநிலை மோசமாக இருக்கிறது. ஆகவே ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கே போதிய நிதி ஒதுக்க முடியாத நிலை. இதனால் இந்த முறை வரிவிதிப்புகள் அதிகமாக இருக்கும்” என்று   சொல்லப்படுகிறது.

அதே நேரம், “பெரிய அளவில் வரி விதிப்புகள் இருக்காது. விரைவில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அடுத்து உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. ஆகவே மக்களின் மீது அதிக வரியை சுமத்த ஆளும் தரப்பு நினைக்காது” என்றும் ஒரு கருத்து உலவுகிறது.