நம்பிக்கையில்லா தீர்மானம்: பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

சென்னை:

ன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அமைதியாக சட்டமன்றம் நடக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு  கடந்த  பிப்ரவரி 18-ம் தேதி, நடைபெற்றது.  அப்போது ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சபை காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

அன்று சட்டசபையில் பெரும் களேபரம் நடந்தது.  திமுகவினர் தன்னை கையைப்பிடித்து முறுக்கியதாக சபாநாயகர் தனபால் புகார் தெரிவித்தார். சபைக்காவலர்கல் தன் சட்டையைக் கிழித்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதன்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையே சபையில் தங்கள் மீது தாக்குதல் நடந்ததாக ஆளுநரிடம் திமுக எம்.எல்.ஏக்கள் புகார் தெரிவித்தனர்.  டில்லி சென்றும் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று சட்டசபையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர திமுக முடிவு செய்துள்ளது.

இதனால் பரபப்பான சூழ்நிலைியல், இன்று சட்டமன்றம் கூடுகிறது.


English Summary
dmk-writes-to-assembly-secy-seeking-no-confidence-motion-against-speaker