சென்னை

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புய; பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 வட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் ‘மிக்ஜம்’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இங்கு மழைநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பால் சிரமப்பட்டனர். இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று வரை விடுமுறை விடப்பட்டன.

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.மழை வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.” 

என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

தவிர காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.