டில்லி

ன்று காலை 11 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து கொரோனா குறித்த காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.

நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது.  குறிப்பாக இரண்டாம் அலை கொரோனாவில் தற்போது பாதிப்பு பெருமளவில் குறைந்த போதும் மரண எண்ணிக்கை குறையாமல் உள்ளது. ஆயினும் மரண எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு குறைத்துக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. 

அரசின் அறிவிப்பின்படி இந்தியாவில் இதுவரை 2,99,73.457 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,89,268 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,89,13,191 பேர் குணம் அடைந்து தற்போது 6,59,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   மேலும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் ஏற்படலாம் என வும் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இந்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.  இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்த வெள்ளை அறிக்கையைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.