தைபே

ன்று சீனா உரிமை கொண்டாடும் தைவானில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

சீனா தொடர்ந்து தைவான் பகுதியை உரிமை கொண்டாடி வருகிறது.  இந்நிலையில் இன்று தைவான் பகுதியில் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக 8 ஆவது முறையாக நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் வேட்பாளர்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

தேர்தலில் டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்- ஜே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இன்றைய அதிபர் தேர்தல் தைவானில் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.