டில்லி
நாடெங்கும் இன்று போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணி தொடங்கி உள்ளது.
குழந்தைகளுக்கு வரும் இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ மிகவும் கடுமையான நோயாகும். இதனால் குழந்தைகள் கை மற்றும் கால்கள் செயல்படாமல் போகின்றன. இதைத் தடுக்க வருடம் தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவது வழக்கமாகும்.
இந்த வருடம் ஜனவரி மாதம் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் தொடங்க இருந்தது. ஆனால் அதே வேளையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால் போலியோ சொட்டு மருந்து முகாம் மாத இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அவ்வகையில் இன்று நாடெங்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. டில்லியில் இந்த பணியை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். இதைப்போல் தமிழகத்திலும் 45,051 முகாம்களில் மருந்து தரப்பட்டு 70.26 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து அளிக்கப்பட உள்ளது.