மும்பை

கொரோனா தாக்குதல் காரணமாக 87 ஆண்டு காலத்தில் முதல் முறையாக ரஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதலில் ரத்து செய்யப்பட்ட  பல கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்த போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.  எனவே ரசிகர்கள் தொலைக்காட்சி மூலம்  போட்டிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர்.  பல போட்டிகள் இவ்வாறு நடந்து வருகின்றன.

உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பை போட்டிகள் முழுவதுமாக ரத்து செய்யபடுவதாக பி சி சி ஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.  87 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாமல் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிசிசிசி செயலர் ஜெய்ஷா தனது அறிவிப்பில் ரஞ்சி போட்டிகள் ரத்தால் வருவாய் இழந்த மட்டைப்பந்து வீரர்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அதே வேளையில் விஜய் ஹசாரே கோப்பை போட்டி, பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் தேசிய அளவிலான போட்டி மற்றும் 19 வயதுக்குப்பட்டோருக்கான வினொ மன்கட் ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.