சென்னை

சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றப்படுகிறது.

ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைவான நேரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதில்லை.  கடந்த சில நாட்களாக நாட்டில் பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டி உள்ளது.  அது தற்போது மேலும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று நேற்றை விட பெட்ரோல் லிட்டருக்கு.31 காசுகளும் டீசல் லிட்டருக்கு 15 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.  இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.23 ஆகவும் டீசல் விலை ரூ.94.39 ஆகவும் உள்ளது.