பழனி
இன்று ஒரு நாள் மட்டும் பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பழனிமலை முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும். தினமும் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யத் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது.
கோவிலுக்கு விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவர வசதியாக ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன. தினமும் 1 மணிநேரம், மாதத்துக்கு ஒருநாள் என ரோப்கார் சேவையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இன்று பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இன்று ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. இன்று ஒரு நாள் மட்டும் மாற்று வழிகளான மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வரலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.