கொல்கத்தா

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் வங்காள தேச அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 31 ஆம் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன், வங்காள தேசம் அணி மோதுகிறது.

 ஏற்கனவே பாகிஸ்தான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை அணிகளைத் தோற்கடித்து நல்ல தொடக்கம் கண்டாலும் அதன் பிறகு அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் வரிசையாகத் தோல்வியடைந்தது.

இவ்வாறு தொடர்ந்து 4 ஆட்டங்களில் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாகத் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கிப் போய் விட்டது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோற்றால் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போகும்.

தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானைத் தோற்கடித்த வங்காள தேச அணி அதன் பிறகு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பலமான அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்தது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே பறிகொடுத்து விட்டதால்  வங்காள தேசம் வரும் ஆட்டங்களில் எத்திரணிக்கு அதிர்ச்சி அளிக்கத் தீவிரம் காட்டும்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, சாத் ஷகீல், ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவுப்.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், தன்சித் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ, ஷகிப் அல்,ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மஹிதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷோரிபுல் இஸ்லாம்.